மேஷ ராசியினருக்கு பல விதத்தில் சிறப்பான பலன் கிடைக்கும் வாரமாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக நீங்கள் நீண்ட அல்லது குறுகிய தூரப் பயணம் செய்ய வேண்டியது இருக்கும்.
வெளிநாட்டில் தொழில் அல்லது படிப்புக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வணிகஸ்தர்களுக்கு மிகவும் சாதகமான வாரமாக இருக்கும். கடந்த கால திட்டங்கள், செயல்பாடுகள், முதலீடுகள் மூலம் உங்களுக்கு நற்பலனும், லாபமும் கிடைக்கும்.
இந்த வாரத்தில் அபாயகரமான முதலீடுகளைத் தவிர்க்கவும். மாணவர்களுக்கு கல்வியிலும், போட்டித் தேர்வில் ஈடுபட்டுள்ளவர்களுக்குச் சாதக பலன் கிடைக்கும். குழந்தையின் செயல்பாடு மகிழ்ச்சி தரும். வீட்டில் மகிழ்ச்சி நிறைத்திருக்கும். வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள். உடல்நிலை சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 1