ராகு குளிகை எமகண்டம்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி
ராகு குளிகை எமகண்டம்
ராகு காலத்தின் கடைசி அரைமணி நேரம் அமிர்த ராகு எனப்படும். உங்களுக்கு விரோதிகளால் பல விதமான துன்பங்கள் ஏற்படுகிறது என்றால் அமிர்த ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்தால் எதிரிகளின் தொல்லை அகலும். எனவே, குளிகையாக இருந்தாலும் எமகண்டமாக இருந்தாலும் ராகு காலமாக இருந்தாலும் எதையும் செய்யவேண்டாம் என்று சொல்லப்படவில்லை..
ராகு காலம் என்றால் என்ன?
  • ராகு காலம் என்பது ஆன்மிகத்தின் படி ஒரு கெட்ட காலமாக அல்லது கெட்ட சகுனமாக கருதப்படுகிறது. ராகு காலத்தில் செய்யப்படும் வேலைகள் அனைத்தும் தடைப்படுவதால் அந்த காலத்தை கெட்ட காலமாக கருதுகிறார்கள்.
  • ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் ராகு காலத்தில் புதிய முயற்சிகள், திருமண பேச்சு வார்த்தை, வீடு குடி போவது, திருமணம், தொழில், புதிய வேலை போன்ற சுபகாரியங்களை செய்வதில்லை.
  • ராகுவால் ஆளப்படுகின்ற ஒன்றரை மணி நேரம் ராகு காலம் என்றழைக்கப்படுகிறது. ஏனெனில் அந்த காலம் ராகுவுக்கு சொந்தமான காலம் ஆகும். இந்த காலம் திங்கட்கிழமையில் இருந்து ஆரம்பிக்கப்படுகிறது.
எமகண்டம் என்றால் என்ன?
  • எமகண்டம் இந்த நேரம் எமனுக்கு ஏற்ற நேரமாக கருதப்படுகிறது. ராகு காலம் போன்றே இந்த நேரமும் கெட்ட நேரமாக கருதப்படுகிறது. எமனால் ஆளப்படுகின்ற ஒன்றரை மணி நேரம் எமகண்டம் என்றழைக்கப்படுகிறது.
  • இந்த நேரத்திலும் சுபகாரியங்களை தொடங்க கூடாது.
குளிகை என்றால் என்ன?
  • குளிகை நேரத்தில் ஒரு காரியத்தைத் தொடங்கினால், அது வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை… குளிகை என்ற நல்ல வேளையில் சொத்து வாங்குவது, சுப நிகழ்வுகள், கடனைத் திருப்பிக் கொடுப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது போன்றவற்றைச் செய்வதால், அவை எந்தத் தடையும் இல்லாமல் நடப்பது மட்டுமின்றி, இது போன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டும் இருக்கும்.. ஆனால் அடகு வைப்பது, கடன் வாங்குவது, வீட்டைக் காலிசெய்வது, இறந்தவர் உடலைக் கொண்டு செல்வது போன்றவற்றை குளிகை நேரத்தில் செய்யக் கூடாது…. ஆக..தொட்டதைத் துலங்க செய்யுமாம் குளிகன் என்ற மாந்தனின் நேரம்..