நம்மளுடைய ஒவ்வொரு நாளின் நன்மை தரும் நேரம், தீமை செய்யும் நேரம் என்று இருவகைகள் இருக்கின்றது. நன்மை தரும் நேரங்களை தெரிந்து கொண்டு அந்த சமயங்களில் சுப காரியங்களை செய்தால் நன்மையாக நடந்து முடியும். தீமை செய்யும் நேரங்களை தெரிந்து கொண்டால் அந்த சமயங்களில் நாம் சுப காரியங்கள் செய்வதை முற்றிலும் தவிர்த்து விடலாம் நன்மை தரும் நேரம், தீமை செய்யும் நேரம் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களை கௌரி பஞ்சாங்கம் அட்டவணையில் நாம் தெரிந்து கொள்ள முடியும். அதில் ஒரு நாள் என்பது பதினாறு முகூர்த்தங்களாகப் பிரிக்கப் பட்டிருகின்றது. ஒரு முகூர்த்தம் நடைபெறும் காலம் மூன்றே முக்கால் நாழிகை. அதாவது ஒன்றரை மணிநேரம் ஆகும். முதல் முகூர்த்தம் என்பது சூரியன் உதயமாவதிலிருந்து ஆரம்பம் ஆகின்றது