அமாவாசை என்பது நிலவின் முதல் கலை ஆகும். வானியல்படி நிலவும் கதிரவனும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நாளே அமாவாசை ஆகும். இந்நாளில் கதிரவ ஒளியானது புவியில் இருந்து காண இயலாத நிலவின் பிற்பக்கத்தில் முழுமையாகப் பதிக்கிறது.
எனவே இந்நாளில் புவியை நோக்கி இருக்கும் நிலவின் முற்பக்கம் ஒளியின்றி இருக்கும். சூரியனும் சந்திரனும் கூடி நிற்கும் தேய்பிறை நாட்களின் கடைசி திதியாகும். அமாவாசை திதி மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதம் இருந்து வழிபடுவதற்குரிய நாளாகும். அன்றைய தினம் நம் முன்னேர்ர்களின் பசியும் தாகமும் அதிகரிக்கும் என்றும் அந்த பசியைப் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும்.
முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் வந்து சேரும்.
அன்னதானம் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும்.
காகத்திற்கு எச்சில் படாத சாதத்தை வைத்த பின்னரே வீட்டில் இருப்பவர்கள் உணவு உண்ண வேண்டும்.