ஜோதிட பதில்கல்

1

தங்கத்தை கண்டுபிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

 
                ஜோதிடர் பதில்கள் !

1. சிம்ம லக்னம்இ புதன் திசை நடந்தால் என்ன பலன்?

🌟 புதன் வலுவாக இருக்கும் பட்சத்தில் பொன்இ பொருள் சேர்க்கை உண்டாகும்.

🌟 மூத்த சகோதரர்களால் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. தங்கத்தை கண்டுபிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய கருத்துக்களால் மனதில் மாற்றம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

3. விருச்சிக ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 பிடிவாத குணம் அதிகம் கொண்டவர்கள்.

🌟 விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை குறைவாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. வீடு நிறைய நகைகள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் குடும்பத்துடன் விரைவில் இன்பச் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் அமையும் என்பதைக் குறிக்கின்றது.

5. ஜாதகத்தில் குரு வலிமை பெற்றால் என்ன பலன்?

🌟 ஆன்மிக பணிகளில் ஈடுபாடு கொண்டவர்கள்.

🌟 இப்படி தான் வாழவேண்டும் என்று நெறிமுறைகளை வகுத்து கொள்ளக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2

ராகு-கேது தோஷம் என்றால் என்ன?

 
                ஜோதிடர் பதில்கள் !

1. மனதிற்கு நெருக்கமானவர்கள் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. ராகு-கேது தோஷம் என்றால் என்ன?

🌟 லக்னம்இ 2இ 7இ 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருந்தால் சர்ப்ப தோஷம் அல்லது ராகு-கேது தோஷமாகும்.

3. நகையை பரிசளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நகையை பரிசளிப்பது போல் கனவு கண்டால் செய்யும் முயற்சிகளில் லாபகரமான சூழல் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

4. சனியும்இ செவ்வாயும் பனிரெண்டில் இணைந்து இருந்தால் என்ன பலன்?

🌟 தூக்கமின்மை தொடர்பான இன்னல்கள் உண்டாகும்.

🌟 வியாபார பணிகளில் லாபத்தை விட விரயங்கள் அதிகமாக இருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. கோவில் கோபுரத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கோவில் கோபுரத்தை கனவில் கண்டால் எதிர்காலம் சார்ந்த பணிகளை மேற்கொள்வீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

3

வீட்டில் கட்டியிருக்கும் கற்றோழையில் பூ பூக்கலோம்,வீட்டில் சுபிட்சம் உண்டோகும்.

4

ஆடி அமாவாசைக்கு என்ன சிறப்பு.. யாரெல்லாம் விரதமிருக்கலாம்.. என்ன செய்யலாம்? செய்யக்கூடாது.

          ஆடி அமாவாசை போன்ற விரத நாட்களில் தெரியாமல் நாம் செய்யும் சில தவறுகள் முன்னோர்களின் கோபத்திற்கு நம்மை ஆளாக்கி விடும். இதனால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். இதனால் ஆடி அமாவாசை விரதத்தை யாரெல்லாம் இருக்க வேண்டும், அன்று ஆண்கள் என்ன செய்ய வேண்டும், பெண்கள் என்ன செய்ய வேண்டும் யாரெல்லாம் தர்ப்பணம் தரலாம் என்று பார்க்கலாம்.

பித்ரு தர்ப்பணத்தின் பலன்:

முன்னோர்களுக்கு நாம் கொடுக்கும் தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் மூலம் பித்ருக்களுக்கு கூடுதல் பலமும் ஆத்மசக்திகளும் கிடைக்கும். அந்த சக்தியை பெறும் பித்ருக்கள் அவற்றை மகாவிஷ்ணுவின் பாதங்களில் சமர்ப்பிப்பதாக ஐதீகம். நாம் செய்யும் பித்ரு தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் நம் முன்னோருக்கு மட்டுமின்றி, நாம் வணங்கும் மகாவிஷ்ணுவையும் சென்று அடைகிறது. எனவேதான் ஆடி அமாவாசை மற்ற எல்லா அமாவாசை நாட்களையும் விட உயர்ந்ததாக கருதப்படுகிறது.

ஆடி அமாவாசை சிறப்பு:

ஒவ்வொரு அமாவாசையன்றும் முன்னோர்களுக்கு நாம் கொடுக்கும் தர்ப்பணம் எமதர்மராஜனின் கைகளுக்கு சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பாராம். ஆடி அமாவாசையானது மறைந்த நம்முடைய முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு புறப்படும் நாளாகும். எனவேதான் தட்சிணாயன புண்ணிய காலத்தின் முதல் அமாவாசையான ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முன்னோர்களுக்கு படையல்:

அமாவாசை நாளில் நாம் சைவ உணவுகளை பெரும்பாலும் சமைக்க வேண்டும். அமாவாசை விரதத்திற்கு சமைக்கும் போது கண்டிப்பாக பூசணிக்காய், அகத்திக்கீரை, வாழைக்காய் உணவில் சேர்க்க வேண்டும். முதலில் முன்னோர்களுக்கு படையிட்டு, பிறகு காகத்திற்கு சாதம் வைத்து விட்டு, யாராவது இரண்டு பேருக்காவது அன்னதானம் வழங்கி விட்டு தான் அமாவாசை விரதம் இருப்பவர்கள் சாப்பிட வேண்டும்.

யாரெல்லாம் விரதம் இருக்க வேண்டும்:

பெற்றோரை இழந்த ஆண்கள், மனைவியை இழந்த ஆண்கள். அப்பா இருந்து, அம்மா மட்டும் இல்லை என்றாலும் அமாவாசை விரதம் இருக்க வேண்டும். அப்பா தர்ப்பணம் கொடுத்தாலும் அந்த குடும்பத்தில் உள்ள மகனும் அம்மாவிற்காக விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டியது அவருடைய கடமை. அம்மா உயிருடன் இருந்து அப்பா மட்டும் இல்லை என்றாலும் அப்போதும் அவருடைய மகன் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். கணவனை இழந்த பெண்களும் அமாவாசை விரதம் இருந்து படையல் போடலாம்.

பசுவிற்கு அகத்திக்கீரை:

அமாவாசை நாளில் மறைந்த முன்னோர்களுக்கு கண்டிப்பாக எள்ளும், தண்ணீரும் இரைத்து முன்னோர்களை வழிபட வேண்டும். அமாவாசை தினத்தில் முன்னோர்களின் படத்திற்கு விளக்கேற்றுவது போல கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும் பசுவிற்கு அகத்திக்கீரை தானம் கொடுக்க வேண்டும்.

பெண்கள் தர்ப்பணம் தரலாமா:

கணவனை இழந்த பெண்கள் மட்டுமே தர்ப்பணம் கொடுக்க வேண்டும். சுமங்கலி பெண்கள் ஒருபோதும் அமாவாசை தர்ப்பணம் கொடுக்கக் கூடாது. சுமங்கலிப் பெண்கள் அமாவாசை நாளில் பட்டினியுடன் சமைக்கக் கூடாது. நன்றாக சாப்பிட்டு விட்டு நிறைந்த வயிற்றுடனேயே விரதத்திற்கான உணவு சமைக்க வேண்டும். அமாவாசை அன்று இரவு உணவின்போது கண்டிப்பாக ஒரு கைப்பிடி அளவாவது அன்னம் சாப்பிட வேண்டும்.


என்ன செய்யக்கூடாது:

அம்மா- அப்பாவிற்கு ஒரே பெண் குழந்தை மட்டும் தான் என்றாலும் சுமங்கலி பெண்கள் தர்ப்பணம் தரக்கூடாது. அன்றைய தினம் கோவிலுக்கு சென்று, தாய்- தந்தையை நினைத்து பிரார்த்தனை செய்து, நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடலாம். அங்கு யாராவது ஒருவருக்கு உணவு வாங்கிக் கொடுக்கலாம். வீட்டிற்கு வந்து அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து யாரையாவது இரண்டு பேரை வீட்டிற்கு அழைத்து அன்னதானம் கொடுக்கலாம்.
 

5

வீட்டிற்குள் அணில் வந்து சென்றால் என்ன பலன்?

Veetirkul anil vanthal enna palan: Anil Veetirkul Varuvathu Nallatha Kettatha

உங்கள் வீட்டிற்கு அணில் வந்து சென்றால் அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தமாம். அணில் கூட்டினை ஒருபோதும் கலைக்கக்கூடாது. அப்படி செய்தால் பட்சி தோஷம் ஏற்படும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மறைந்த முன்னோர்கள் பட்டாம்பூச்சி வடிவத்தில் வீட்டை சுற்றி வட்டமிடுகிறார்கள் என்றும் சொல்கிறது சாஸ்திரங்கள்.

கிராமத்தில் வசிப்பவர்கள் வீட்டிற்குள் அணில் பிள்ளை வந்து போகும். நகரங்களில் குடியிருப்புகளில் பட்டாம்பூச்சி சுற்றி வரும். அதை ஆச்சரியமாக நம்முடைய பிள்ளைகள் பார்ப்பார்கள். ஜோதிட சாஸ்திரத்தின்படி, வீட்டிற்கு அணில் அடிக்கடி வந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மற்ற உயிரினங்களை ஒப்பிடுகையில் அணில் தனித்துவமான குணாதிசயம் கொண்ட உயிரினம் ஆகும். அணில் வீட்டிற்கு வந்து சென்றால் அதிர்ஷ்ட தேவதை வந்துவிட்டார் என்று அர்த்தமாம்.

சிலரது வீடுகளில் சண்டை சச்சரவுகள் இருக்கும். அப்படி ஓயாத சண்டை நடக்கும் வீட்டிற்குள் ஒருமுறை அணில் வந்து சென்றால் அந்த சண்டைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்குமாம். ராமபிரான் அணிலை தடவிக்கொடுத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. பழ மரங்கள் அதிகம் வளர்க்கும் வீடுகளில் அணில்கள் வரும். கொய்யாப்பழம், மாம்பழம் போன்றவை அணிலுக்கு மிகவும் பிடிக்கும். அதனால் இந்த மரங்களை வீட்டில் வளர்த்தால் அணில்கள் உங்கள் வீடு தேடி வரும். அணில்கள் வீட்டிற்குள் வருவது மகிழ்ச்சியை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

வீட்டிற்குள் இருக்கும் பிரச்னைகள் தீரும், பிரிந்து போன சொந்தங்கள் ஒன்றாகச் சேர்வார்கள். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருக்கும் சண்டை சச்சரவுகள் நீங்கும். விவாகரத்து வரை சென்றாலும் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. தவறான வழியில் செல்ல இருப்பவர்களுடைய மனநிலையில் நல்ல ஒரு மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் சகோதர, சகோதரிகளுக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். பொருளாதார நிலை அதிகரிக்கும். பண வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வரப்போகிறது என்பதை அணில்கள் உணர்த்துகின்றன.
நம்முடைய வீட்டில் குருவிக்கூடு, அணில் கூடு கட்டியிருந்தால் அதை நாம் கலைத்து விடக்கூடாது. தெரிந்தோ, தெரியாமலோ நாம் கூட்டினை கலைத்து விட்டால் நமக்கு பட்சி தோஷம் ஏற்படும். பட்சி தோஷம் பலவிதமான பிரச்சனைகளை நமக்கு கொடுக்கும் என்பதால் அணில் கூட்டை எப்பொழுதும் கலைக்கக் கூடாது.

 

6

வீட்டிற்குள் பட்டாம்பூச்சி  வந்து சென்றால் என்ன பலன்?

பட்டாம்பூச்சி நம்முடைய வீட்டிற்கு வந்து போவதும் நல்ல செய்தியை கொண்டு வரும். மறைந்த நம்முடைய முன்னோர்கள்தான் பட்டாம்பூச்சி வடிவத்தில் நம்முடைய வீட்டிற்குள் வருகிறார்கள் என்று நம்பப்படுகிறது. மஞ்சள் வண்ண நிற பட்டாம்பூச்சி, பொருளாதார நிலையையும் செல்வ வளத்தையும் அதிகரிக்குமாம். பச்சை நிற வண்ணத்துப்பூச்சி வீட்டிற்குள் வந்தால் அது ஆரோக்கியத்தினை அதிகரிக்குமாம். வண்ணத்துப்பூச்சி வீட்டிற்குள் வருவதன் மூலம் திருமணம் நடைபெறுவதில் சுப காரியங்கள் நடைபெறுவதில் தடைகள் ஏற்பட்டிருந்தால் அது நீங்குமாம்.

Veetirkul anil vanthal enna palan: Anil Veetirkul Varuvathu Nallatha Kettatha

விருந்தினர்கள் வரப்போகிறார்கள் என்பதைக்கூட பட்டாம்பூச்சிகள் உணர்த்துமாம். நம்முடைய முன்னோர்கள் நமக்கு ஏதோ ஒரு நல்ல விசயத்தை சொல்வதற்காக பட்டாம்பூச்சியின் வடிவத்தில் வீட்டிற்குள் வருகிறார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது. எனவே வீட்டிற்கு பட்டாம்பூச்சி வந்தால் பதற்றப்பட வேண்டாம்.

7

பூஜை அறையில், பூ வைக்காமல் சாமி கும்பிடலாமா? 

பூஜை என்றால் நம்முடைய நினைவுக்கு முதலில் வருவது புஷ்பங்கள். வாசனை நிறைந்த பூக்கள் இல்லை என்றால் நம்முடைய பூஜை நிறைவடைந்தது போல ஒரு திருப்தியே இருக்காது. ஆனால் தினமும் சுவாமி படங்களுக்கு புதுசாக பூ வைப்பது சில பேருக்கு சில சிரமங்கள் இருக்கிறது. அந்த காலத்தில் எல்லாம் வீட்டிற்கு முன்பாகவே பூ செடிகளை வளர்த்து வருவார்கள். தினமும் அந்த பூக்களை பறித்து சுவாமிக்கு புதுசாக சூட்டி வழிபாடு செய்து வந்தார்கள். அதில் முழுமையான மனநிறைவும் கிடைத்தது. ஆனால், இன்றைய சூழ்நிலை ஒரு சில சமயங்களில் பூக்கள் கிடைப்பது கிடையாது.

flower1

அப்படியே கிடைத்தாலும் சீசன் இல்லாத சமயத்தில் பூக்களின் விலை ரொம்பவும் அதிகமாக இருக்கிறது. அந்த சமயத்தில் என்ன செய்வது. வாடிய பூக்களை அப்படியே சுவாமி படங்களில் வைத்து பூஜை செய்யலாமா அல்லது பூக்களே இல்லாமல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாமா, இந்த கேள்விகளுக்கான தெளிவான ஆன்மீகம் சார்ந்த விளக்கத்தினை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பூஜை சமயத்தில், பூ இல்லாத போது என்ன செய்வது?

பூஜை அறையில் தினமும் விளக்கு ஏற்றுவதற்கு முன்பு பூஜை அறையில் இருக்கும் வாடிய பூக்களை எல்லாம் சுத்தம் செய்துவிட்டு, ஊதுவத்தி சாம்பலை எல்லாம் எடுத்துவிட்டு, பூஜை அறையை முழுமையாக சுத்தம் செய்து விட்டு தான் விளக்கு ஏற்ற வேண்டும். புதுசாக பூ இல்லை என்றாலும் வாடியப் பூக்களை ஒருபோதும் சுவாமி படங்களுக்கு வைத்து விளக்கு ஏற்றாதீர்கள். இன்றைக்கு வைத்த பூ நாளைக்கு வாடி விட்டால் அதை எடுத்து விடுங்கள்.

ஆனால் விளக்கு ஏற்றி சுவாமி கும்பிடும்போது பூஜை அறையில் பூ இல்லையே என்ற மன கவலை நிச்சயம் நமக்கு இருக்கும். பூ வைக்காமல் விளக்கு ஏற்றுவதற்கு சிலருக்கு மனசு இருக்காது. அப்படி இருக்கும்போது என்ன செய்வது. பெரும்பாலும் இப்போது நிறைய வீடுகளிலும் துளசி செடி வளர்க்கும் பழக்கம் இருக்கிறது. அந்த துளசி செடியிலிருந்து இரண்டு இலைகளை பறித்து பூஜையறையில் ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்து விடுங்கள். பூவே இல்லை என்றாலும் நீங்கள் பூ வைத்து பூஜை செய்த பலனை முழுமையாக பெறலாம்.

சில பேர் வீட்டில் துளசி செடி இல்லை என்றால் என்ன செய்வது. வாசம் நிறைந்த பூக்களுக்கு உள்ள மகிமை மணமணக்கும் சந்தனத்திற்கு உள்ளது. ஒரு கிண்ணத்தில் கொஞ்சமாக சந்தனம் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி கரைத்து பூஜை அறையில் வைத்து விட்டு பூஜையை நீங்கள் செய்யலாம். இந்த சந்தனத்தின் வாசம் பூக்கள் இல்லாத குறையை தீர்த்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களால் முடியும் என்றால் கொஞ்சம் வாசனை நிறைந்த பன்னீரை வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அந்த சந்தனத்தில் பன்னீர் ஊற்றி சுவாமி அறையில் வைத்துவிட்டு விளக்கு ஏற்றி வழிபாடு செய்து விட்டு பூஜை இறுதியில் அந்த சந்தனத்தை தொட்டு நெற்றியில் வைத்துக் கொள்வது அவ்வளவு பாசிட்டிவ் வைப்ரேஷனை கொடுக்கும். நீங்கள் பூஜை செய்த மன நிறைவை முழுமையாக பெறுவீர்கள்.

இனி பூஜைக்கு பூ இல்லையே என்ற கவலையோடு விளக்கு ஏற்றி வழிபாடு செய்யாதீர்கள். மேல் சொன்ன இந்த விஷயங்களை பின்பற்றி பாருங்கள் நிச்சயம் பூஜை செய்த மகிழ்ச்சியை மனநிறைவை முழுமையாக பெறுவீர்கள் என்ற தகவலோடு இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

8

எந்த விரலில் திருநீறு இடவேண்டும்?

விபூதியை அணிந்து கொள்வதற்கு மோதிர விரலே சரியான ஒன்று. மோதிர விரலினால் விபூதியை தொட்டு அணிந்து கொள்ளும் அனைவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அடைவார்கள்.

சிறு விரல் எனப்படும் சுண்டு விரலும் விபூதி அணிந்து கொள்ள ஏற்றதல்ல. இதன் மூலம் விபூதி அணிந்து கொண்டால் கிரக தோஷங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

9

தேரை வீட்டிற்கு வந்தால் என்ன பலன்?

தேரை வீட்டிற்குள் வந்தால் உங்கள் வீட்டில் துரதிஷ்டம் உள்ளது என்று அர்த்தம் அதனால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும். வேதனைகளும் அதிகரிக்கும்.

 

10

தவளை வீட்டிற்குள் வந்தால் என்ன பலன்?

தவளை வீட்டிற்குள் வந்தால் சண்டை சச்சரவு அதிகமாகும் பண இழப்பீடு ஆகும். குடும்பத்தினருக்கு நோய் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் ஆகும்.

11

தேங்காய் அழுகி இருந்தால் என்ன பலன்?

சாம்பார் வைக்கும் போது தேங்காய் உடைத்தது அழுகி இருந்தால் அது கேட்டதும் இல்லை நல்லதும் இல்லை பொதுவாக தேங்காய் என்பது அழுகி இருப்பது வழக்கம் தான் ஆனால் சாமி கும்பிடும் பொழுது தேங்காய் உடைத்து அழுகி இருந்தால் என்ன பலன் இப்போது பார்ப்போம்.

பொதுவாக நாம் கோயிலில் தேங்காய் உடைக்கும் போது அழுகி இருந்தால் நமக்கு ஏதோ கெடுதல் நடக்கப்போகிறது என்று பயம் ஏற்படும் ஆனால் உண்மையாகவே தேங்காய் கோயிலில் சாமிக்கு உடைக்கும் பொழுது அழுகி இருந்தால் அது நன்மையாக தான் போய் முடியும்.இதனால் வரை உங்களுக்கு இருந்த பிரச்சனைகள் உங்களுடன் இருந்த தீய சக்திகள் அனைத்தும் நீங்கி நீங்கள் ஒரு நல்ல நிலைமைக்கு வருவீர்கள்.

12

மயில் வீட்டிற்கு வந்தால் என்ன பலன்?

பொதுவாக மயில் என்பது மனித நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் வருவது என்பது அரிதான ஒன்றாகும் மனிதர்களை பார்த்தாலே மயில் ஓடி விடும் அப்படி இருக்கும் பொழுது மயில் நம் வீட்டிற்குள் வந்தால் என்ன பலன் என்பதை இப்போது பார்ப்போம். மயில் வீட்டிற்கு வந்தால் முருகன் வீட்டிற்கு வந்துள்ளார் என்று அர்த்தம் அதாவது உங்களுக்கு பெரிய ஆபத்து ஒன்று வரவிருந்தது அந்த ஆபத்திலிருந்து முருகன் உங்களை காப்பாற்றி உள்ளார் என்று அர்த்தம்.

13

உடும்பு வீட்டிற்கு வந்தால் என்ன பலன்?

 உங்கள் வீட்டில் நிலை மாறும் என்பதையும் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் மற்றும் நல்ல காரியங்களை நடத்துவீர்கள் என்று அர்த்தம் ஆகும்

14

தேங்காய் எண்ணெய் விளக்கு ஏற்றினால் என்ன பலன்?

பொதுவாக விநாயகர் கோயிலில் சாமி கும்பிடும் பொழுது தேங்காய் எண்ணெயில் விளக்கு ஏற்றி கும்பிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அதன் மூலம் நமக்கு என்ன பலன் இருக்கிறது என்று இப்பொழுது பார்க்கலாம்.

கடவுளுக்கு பலம் காய் வகைகள் வாழைப்பழம் மற்றும் தேங்காய் சிறந்த பொருளாக இருக்கிறது. விநாயகருக்கு அல்லது கடவுளுக்கு தேங்காய் எண்ணெய் ஏற்றுவதன் மூலம் கடவுளின் அருள் நேரடியாக கிடைக்கிறது. அது மட்டுமில்லாமல் தேங்காய் எண்ணெயை தேங்காயில் வைத்து ஏற்றினால் இன்னும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.

15

பால் கீழே கொட்டினால் என்ன பலன்?

பால் வாங்கிட்டு வரும்போது தெரியாமல் கொட்டினாலோ அல்லது தெரிந்து வேண்டுமென்றே கொட்டினாலும் ஒரே பலன் தான்.பாலை வீட்டில் கீழே கொட்டுவது ஏதோ ஒரு பிரச்சனை நடக்கப் போகிறது என்று அர்த்தம் அதனால் பால் வீட்டில் கொட்டினாலோ அல்லது வேணும் என்று கொட்டினாலும் கவனத்துடன் செயல்படுவது அவசியமாகும்.

இதுபோன்ற அவசகுனமான செயல்கள் வீட்டில் நடந்துவிட்டால் வீட்டின் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவது நல்லது கடவுளை வணங்குவதன் மூலம் உங்கள் வீட்டில் நடக்க இருக்கும் பிரச்சனைகள் குறையும்.

16

குங்குமம் கொட்டினால் என்ன பலன்?

பொதுவாக கல்யாணமான பெண்கள் தான் குங்குமம் அதிக அளவில் பயன்படுத்துவார்கள். குங்குமத்தை வைக்கும் பொழுது அல்லது யாரிடமோ கொடுக்கும்பொழுது கீழே கொட்டினால் என்ன பலன் என்பதை இப்பொழுது பார்ப்போம். அதாவது குங்குமம் கை தவறி கீழே கொட்டினால் எந்த தவறும் கிடையாது தெரியாமல் செய்த எந்த ஒரு காரியத்திற்கும் தவறுகள் நடக்காது.

இருந்தாலும் உங்கள் மனம் உறுத்திக் கொண்டே இருக்கும் அதனால் கல்யாணம் ஆன பெண்கள் குங்குமம் கீழே கொட்டினால் அருகில் கல்யாணம் ஆகி இருக்கும் பெண்களுக்கு தாலிக்கயிறு மற்றும் குங்குமம் வாங்கி கொடுத்தால் உங்களுக்கு எந்த வித கெட்டதும் நடக்காது.

17

விபூதி கொட்டினால் என்ன பலன்?

கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்ட பிறகு விபூதி கொடுப்பார்கள் அப்பொழுதும் அல்லது நம் சும்மா இருக்கும் பொழுது விபூதி வைக்கும் பொழுதும் விபூதி தவறுக்கு கீழே விழுந்தால் நமக்கு கெடுதல் நடக்கும் என்று சொல்வார்கள் அப்படி விபூதி தவறி கீழே விழுந்தால் என்ன பலன் என்பதை இப்போது பார்ப்போம்.விபூதி அல்லது குங்குமம் கீழே கொட்டினால் அதை சில பேர் நினைத்துக் கொண்டே இருப்பார்கள்.

விபூதி அல்லது குங்குமம் கைத்தறி கிளை கொட்டினால் சகுனம் தடையாக யாரும் பார்க்க வேண்டாம் அதை எதார்த்தமாக நடந்த ஒரு செயலாகும். குங்குமம் மற்றும் விபூதி கீழே கொட்டி உங்கள் மனம் வருத்தமாக இருந்தால் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவதன் மூலம் உங்கள் மனம் நிம்மதி பெறும்.

18

குருவி வீட்டுக்குள் வந்தால் என்ன பலன்?

பெரும்பாலும் குருவிகள் வெளிப்பகுதியில் மரங்களில் சுற்றி திரியும் வீட்டின் அருகே வரும் ஆனால் வீட்டிற்குள் வராது அதையும் மீறி வீட்டிற்குள் வந்தால் என்ன பலன் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம். குருவி இனங்கள் வீட்டிற்குள் வந்தால் உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது என்று அர்த்தம்.

அதுமட்டுமல்லாமல் குருவி அல்லது பறவை வகைகள் ஏதேனும் வீட்டில் கூடு கட்டி இருந்தால் அந்த கூட்டை கலைத்து விடாதீர்கள் பறவையின் கூட்டை கலைத்தால் குடும்பம் கலைந்து விடும் என்றெல்லாம் சொல்வார்கள் அதனால் பறவையின் கூட்டை கலைக்காமல் இருப்பது நல்லது.

19

அரணை வீட்டிற்கு வந்தால் என்ன பலன்?

அரணை மழை காலத்தில் அதிகளவு இதை பார்க்க முடியாது வெயில் காலத்தில் தான் இதை பார்க்க முடியும் மழைக்காலம் ஆரம்பித்து விட்டால் தனது கோட்டிற்குள் சென்று அடைந்து விடும். அப்படி இருக்கும் அரணை வீட்டிற்குள் வந்தால் என்ன பயன் கிடைக்கும் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

அரணை வீட்டிற்குள் வந்தால் எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது என்ற அர்த்தம். ஒரு வீட்டிற்குள் அரணை வந்தால் ஓரிரு நாட்களில் அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று அர்த்தம்.

20

கருவண்டு வீட்டில் வந்தால் என்ன பலன்?

ஒரு சில பூச்சிகள் வீட்டுக்குள் வந்தால் நல்லது நடக்கும் பொதுவாக வண்டு என்பது மழைக்காலத்தில் வீட்டில் லைட் எரிந்தால் வெளிச்சத்திற்கு வீட்டிற்குள் வந்து விடும். கருப்பு வண்டு வீட்டிற்குள் வந்தால் நல்லது தான் பொதுவாக கருப்பு உண்டு வீட்டிற்குள் வருவது வீட்டிற்கு கண் திருஷ்டி அதிகமாக ஆகிவிட்டது என்று அர்த்தம்.

அதாவது நீங்கள் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் ஆக இருந்து தொழிலில் நல்ல லாபம் கிடைத்து வாழ்வில் முன்னேறி பண வரவுகள் அதிகரித்து இருந்தால் அது மற்றவர்களுக்கு தெரிய வந்து கண் திருஷ்டி உங்களுக்கு வரும்.

உங்கள் வீட்டில் இருபுறமும் வீடுகளில் இருந்து நீங்கள் நடுவில் இருக்கிறீர்கள் என்றால் கருவண்டு வரும் திசையில் இருந்து பலன்கள் இருக்கிறது. இடது புறத்திலிருந்து கருவண்டு வந்தால் இடதுபுற வீட்டில் இருக்கும் நபர் தான் உங்கள் மீது கண் திஷ்டி வைத்திருக்கிறார்.

அதுவே வலது பக்கத்திலிருந்து கருவண்டு வந்தால் வலது பக்கம் வீட்டில் இருப்பவர்கள் தான் உங்கள் மீது கண் திருஷ்டி வைத்திருக்கிறார் என்று அர்த்தம்.

21

பூரான் காலில் ஏறினால் என்ன பலன்?

பூரான் போன்ற விஷ பூச்சிகள் வீட்டிற்குள் வருவது வீட்டில் வந்து நம் கால்கள் கைகள் மீது ஏறுவது போன்ற செயல்கள் ஏற்பட்டால் பணக்கஷ்டம் மற்றும் மன கஷ்டங்கள் ஏற்படும்.

22

நந்தி கனவில் வந்தால் என்ன பலன்?

நந்தி பகவானுக்கு மகிழ்ச்சி,ஆனந்தம் சந்தோஷம் என வேறு பெயர்கள் இருக்கிறது அப்பேர்ப்பட்ட நந்தி பகவான் நம் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும்.புதிதாக ஏதும் தொழில் தொடங்க இருந்தால் அந்த தொழிலில் நஷ்டங்கள் எதுவும் வராமல் லாபம் மட்டும் கிடைக்கும்.

23

வலது கண் துடித்தால் என்ன பலன்?

பொதுவாக ஆண்களுக்கு வலது கண்ணும் பெண்களுக்கு இடது கண்ணும் துடித்தால் நல்லது நடக்கும் என்றும் ஆண்களுக்கு இடது கண்ணும் பெண்களுக்கு வலது கண் துடித்தால் பிரச்சனைகள் ஏற்படும் என்று பலரால் நம்பப்படுகிறது.