வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாகப் பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே... நவக்கிரக நாயகர்களின் முதல்வரான சூரியன் உங்கள் ராசிக்கு 6 ஆம் வீட்டில் இருக்கிறார். வெற்றியும் தோல்வியும் இணைந்து உங்களோடு நடக்கின்ற வாரம் இது. வீடு தேடி வருகின்ற வாய்ப்புகளை தவற விட்டு விடாதீர்கள். தொழில் துறையில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு பின்னர் நிவர்த்தியாகும். சந்திரனின் இடப்பெயர்ச்சி உங்களுக்கு உயர்வான பலனை தரும். பணவரவு திருப்தியாக இருக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். செவ்வாய் 6,7 ஆம் இடத்தில் இருக்கிறார். ரியல் எஸ்டேட் தொழிலில் கவனம் செலுத்துங்கள். புதன் 5,6 ஆம் வீட்டில் இருக்கிறார். தொழிலை விரிவுபடுத்த அரசாங்க உதவி பெறுவீர்கள். பசுமை வீடுகள் கட்டுவதற்கான அனுமதி கிடைக்கும். குரு 1 ஆம் வீட்டில் இருக்கிறார். வெளியூர் பயணங்களில் விசேஷமான பலன்களை காண முடியாது. சுக்கிரன் 4,5 ஆம் வீட்டில் இருக்கிறார். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஏற்றம் பெறுவீர்கள். அரசு ஊழியர்கள் அனுகூலம் அடைவார்கள். சனி 11 ஆம் வீட்டில் இருக்கிறார். புதிய கட்டடங்கள் கட்டி விற்பீர்கள். உறவில் இருந்த சிக்கலை தீர்ப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். ராகு ராசியிலேயே இருக்கிறார். கடன்களை விரட்டி வசூல் செய்வீர்கள். கேது ஏழாம் வீட்டில் இருக்கிறார் வீட்டில் வைத்திருந்த பணம் காணாமல் போக வாய்ப்பு இருக்கிறது