இராகு கேது பெயர்ச்சி பலன்கள்

  

- 2025

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

மேஷம் ராசி நேயர்களே 

இது வரை உங்கள் ராசிக்குள் ராகு பகவானும், ஏழாம் இடத்தில் கேது பகவானும் சஞ்சரித்து பலவகை தொந்தரவுகளை கொடுத்து இருப்பார்கள். ஒன்றை ஆண்டுகளாக மேஷ ராசிக்கு போதாத காலமாகவே இருந்து வந்தது, இனி 08.10.2023 அன்று வரப்போகும் ராகு - கேது பயற்சி பல வகையில் மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் தரப்போகிறது. இந்த பெயர்ச்சியில் ராகு பகவான் விரைய ஸ்தானத்திற்கும் - கேது பகவான் ரண ருண ரோக சத்ரு ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். இதனால் கூடுதலான அலைச்சல் உண்டாகும் என்றாலும் நல்ல தனலாபம் உண்டு. மனதில் தெளிவு பிறக்கும். அடுத்தவரின் தேவைகளை நிறைவேற்றி வைக்க முடியும். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். பணத்தினை நியாமான வழியில் சேமிப்பது அவசியம். எந்த ஒரு யோசனையும் இல்லாமல் செய்யும் முதலீடுகளால் சில பண நஷ்டத்தினை சந்திக்க நேரிடும். நம்பிக்கையான இடங்களில் பணத்தை சேமிப்பது நன்மை தரும். எப்போதும் பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் சாதகமான சூழல் ஏற்படும்.
குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். கணவன் மனைவிடையே புரிதல் அதிகரிக்கும். திருமண காரியம் விரைவில் கைகூடும். பண வரவுகள் காரணமாக குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். பழைய கடன்கள் ஓரளவு அடைப்படும். சொந்த வீடு, வாகனம் யோகம் உண்டாகும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும். கொடுக்கல், வாங்கல் லாபமளிக்கும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். உங்களை சுற்றி இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். புத்திரர் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.
அடிக்கடி தொலைதூரப் பிரயாணங்கள் செல்ல வேண்டியிருக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு பயணத்திற்கான வாய்ப்பு உண்டு. நண்பர்களுக்காக உதவி செய்யும் சூழல் உருவாகும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ராகுவின் இடமாற்றம் உங்கள் வேகத்தினைக் குறைக்கும். உங்களது நடவடிக்கையை பார்த்து மற்றவர்கள் வியந்து போவர். எதிலும் பொறுமையாக இருந்தால் மட்டுமே பல முக்கிய பொறுப்புகளை ஏற்று செயல்பட இயலும்.
வழக்கு விவகாரங்களில் சமாதானமாகப் போவது நல்லது. வேகத்தினைவிட விவேகமே சிறந்தது என்பதனை நன்கு உணர்ந்து செயல்படுவது நல்லது. நீங்கள் எல்லா இடத்திலும் விட்டுக்கொடுத்துச் செல்வதால் உங்கள் கௌரவம் உயரும். எதிலும் பொறுமையுடன் இருந்தால் மட்டுமே நற்பலனை அனுபவிக்க முடியும். 6ம் இடத்தில் அமருகின்ற கேது பகவான் எதிரிகளை வெல்வார். எதிர்ப்புகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். மேலும் தான் அமரும் இடத்தின் வலிமையைக் குறைப்பவர் கேது என்பதால் கடன் பிரச்னைகள் குறையும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடி வரும்.

உத்யோகத்தில் இருப்பவர்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். உத்யோகத்தில் வேலை பளு இருக்கும். உத்யோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். ஒரு சிலருக்கு சுயமாகத் தொழில் செய்யும் நிலை உருவாகும். எதிர்பார்த்திருந்த இடமாற்றங்கள் சாதகமாகும். வித்தியாசமான அணுகுமுறையால் போட்டில் ஜெயிக்க முடியும். கூட்டு தொழில், வியாபாரத்தில் பொறுமையை கடைப்பிடிக்கவும். தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும். தொழில், வியாபாரத்தில் எடுக்கும் புது முயற்சிகளில் வெற்றிகள் கிட்டும். வெளிநாட்டு தொடர்புகளால் ஆதாயம் உண்டு.

நாள்பட்ட உடல் உபாதைகள் நீங்கும். தேக பலம் நலம் பெரும். யாரையும் சார்ந்திருக்காமல் தனித்து செயல்பட்டு வெற்றி காண முடியும். குடும்பத்தில் பொருள் சேர்க்கை உண்டாகும். ஜனன ஜாதகத்தில் கேதுவின் வலிமை இருக்கப் பிறந்தவர்களுக்கு கேதுவின் அனுக்கிரகத்தால் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் ராகு பகவான் சற்று அலைச்சலைத் தந்தாலும் கேது அதற்குண்டான நற்பலன்களைத் தந்து உங்கள் வாழ்க்கை நிலையை உயர்த்துவார்.