அஸ்வினி நட்சத்திரம் !!
⭐நட்சத்திரத்தின் ராசி : மேஷம்.
⭐நட்சத்திரத்தின் அதிபதி : கேது.
⭐ராசியின் அதிபதி : செவ்வாய்.
பொதுவான குணங்கள் :
⭐செவ்வாய்க்கு உரிய கோபம் மற்றும் பிடிவாத குணம் கொண்டவராக இருப்பார்கள்.
⭐சண்டையில் அதிக ஈடுபாடு கொண்டவராகவும், அயராத உழைப்பை கொண்டு வெற்றி பெற வேண்டும் என்னும் தீவிரம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
⭐பெண்களிடம் இனிமையாக பேசக்கூடியவர்.
⭐இவரை அவமதித்தால் மனதில் பழிவாங்கும் எண்ணம் உடையவராக இருப்பார்கள்.
⭐தவறுக்காக மன்னிப்பு கேட்கும் இயல்பு உடையவர்கள்.
⭐எந்த காரியத்தையும் தைரியத்துடன் செய்து முடிப்பவராக இருப்பார்கள்.
⭐தனது தாய் தந்தையர் மீது ஓரளவு பாசம் உடையவராக இருப்பார்கள்.
⭐அழகும், முரட்டுச் சுபாவமும் உடையவராக இருக்கக்கூடும்.
அஸ்வினி முதல் பாதம் :
⭐இவர்களிடம் அஸ்வினியின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
⭐அதிக கோபம் மற்றும் பிடிவாத குணம்.
⭐அடிக்கடி சண்டையில் ஈடுபடுவது.
⭐சொத்து சேர்க்கை உண்டாகும்.
⭐எடுத்த காரியத்தில் வெற்றி.
அஸ்வினி இரண்டாம் பாதம் :
⭐இவர்களிடம் அஸ்வினியின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
⭐சாந்தகுணம் மற்றும் பொறுமைசாலியாக இருப்பார்கள்.
⭐மனைவியின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.
⭐உயர்ந்த புகழ் மற்றும் கௌரவத்தை அடைவார்கள்.
அஸ்வினி மூன்றாம் பாதம் :
⭐இவர்களிடம் அஸ்வினியின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
⭐இவர்கள் தைரியசாலிகளாக இருப்பார்கள்.
⭐சாதுர்யமான பேச்சுத் திறமை கொண்டவர்கள்.
⭐கல்வி மற்றும் நுட்பமான ஆராய்ச்சியில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.
⭐வாதம் செய்வதில் வல்லவர்கள். கற்பனையில் சிறந்தவர்கள்.
⭐அன்னையின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.
அஸ்வினி நான்காம் பாதம் :
⭐இவர்களிடம் அஸ்வினியின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
⭐பிறரை அடக்கி ஆளக்கூடிய சக்தி கொண்டவர்கள்.
⭐முன் கோபம் உடையவர்கள்.
⭐தர்ம சிந்தனையும், தெய்வ பக்தியும் உடையவர்கள்.
⭐அரசுடன் தொடர்புடைய துறைகளில் ஈடுபாடு இருக்கும்.